இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு!

Photo of author

By Hasini

இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு!

மல்யுத்த வீரர் சுசில் குமார் 2008 ல் ஒலிம்பிக் மற்றும் 2010 ம் ஆண்டு போட்டிகளில் பங்குபெற்று தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.1983 ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இந்நிலையில் மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தான்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது.அதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் சுசில் குமார் மற்றும் அவர் தரப்பு நண்பர்கள் சாகர் ராணாவை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

பல காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.போலீசார் கொலை வழக்கு பதிந்து மல்யுத்த வீரர் சுசில் குமாரை தேடி வருகின்றனர்.கடந்த 2 வாரங்களுக்கும் மேல் சுசில் குமாரை ஹரியானா, உத்தரகான்ட் போன்ற மாநிலங்களில் தேடி வந்த நிலையில் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

எனவே மல்யுத்த வீரரை பற்றிய தகவலும், எங்கு இருக்கிறார் என்று கூறும் நபர்களுக்கு தலா 1 இலட்ச ரூபாயை இனாமாக தருவதாகவும், டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.அதேபோல் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் அஜய் என்ற நபரை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.50000 வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அதற்குள், டெல்லி ஐகோர்ட்  மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதனை தொடர்ந்து சுசில்குமார் தரப்பில் இன்று, முன்ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்துள்ளனர்.