5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம்! காரணம் என்ன?

0
78

சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையின் மாவட்ட ஆட்சியாளராக தமிழக தொழில் மேம்பாட்டு கழக நிர்வாகியாக இருந்த அனிஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில சமூக மற்றும் சத்துணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த கார்மேகம் சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில ஆணைய செயலாளராக இருந்த பாலசுப்ரமணியம் கடலூர் மாவட்ட ஆட்சியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியாளராக இருந்த திவ்யதர்ஷினி தர்மபுரி மாவட்ட ஆட்சியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளரான இறையன்பு மே 17ஆம் தேதியன்று பிறப்பித்துள்ளார்.

மேலும் சேலம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த ராமன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தர்மபுரி ஆட்சியர் கார்த்திகா ஆகியோர்களுக்கு புதிதாக எந்த ஒரு பணி இடமும் ஒதுக்கப்படவில்லை.

சேலம் மாவட்டத்திற்கு புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட கார்மேகம் மிகவும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி உள்ளார். பள்ளி கல்வி துறையில் இருந்து மாவட்ட ஆட்சியாளராக உயர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kowsalya