லிப் லாக் மன்னனுடன் ரகசிய திருமணம்.. உல்லாச வாழ்க்கை வாழ்ந்த “ஸ்ரீதேவி”!!
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.1960 ஆம் ஆண்டில் தனது திரைவாழ்க்கையை தொடங்கிய இவர் 1973 இல் வெளியான அரங்கேற்றம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
பிறகு சொல்லத்தான் நினைக்கிறேன்,அபூர்வ ராகங்கள்,16 வயதினிலே,ஆடுபுலி ஆட்டம் என்று பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இவர் அந்த காலத்திலேயே பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது.கமலுக்கு முதல் மனைவி வாணி கணபதி மற்றும் இரண்டாவது மனைவி சரிகா என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
ஆனால் கமல் பல நடிகைகளுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்திருக்கிறார் என்று உண்மை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.நடிகை ஸ்ரீ வித்தியா தனது முதல் காதலி என்று கமலே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
இரண்டாவது மனைவி சரிகாவை விவாகரத்து செய்த பின்னர் கமல் அவர்கள் கௌதமி,இடுப்பழகி சிம்ரன்,விருமாண்டி நடிகை அபிராமி,பூஜாகுமார்,ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நடிகைகளுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த கிசு கிசுக்கள் நீங்கள் அறிந்தவையாக இருக்கலாம்.ஆனால் தன்னுடன் 18 படங்களில் இணைந்து நடித்த நடிகையை கமல் ரகசிய திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்து வந்தார் என்பது பலரும் அறியாத விஷயம்.
அந்த நடிகை 70,80களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர்.அவர் வேறு யாரும் இல்லை நடிகை ‘மயிலு’ ஸ்ரீதேவி அவர்கள் தான்.கமல் மற்றும் ஸ்ரீதேவி அவர்கள் இணைந்து மூன்று முடிச்சு,16 வயதினிலே,புதிய ஒளியைப் பாய்ச்சியது,கல்யாண ராமன்,வறுமையின் நிறம் சிவப்பு,குரு,மனிதரில் இத்தனை நிறங்களா,சக்கைப் போடு போடு ராஜா,தாயில்லாமல் நானில்லை,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம்,மூன்றாம் பிறை, சிகப்புக்கல் மூக்குத்தி,சிகப்பு ரோஜாக்கள்,ஆடு புலி ஆட்டம்,சங்கர்லால்,நீலமலர்கள் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர்.
கமல்-ஸ்ரீதேவி காதல் டூ கல்யாணம்:
படங்களில் அழகாக காதலித்து போல் இருவரும் நிஜத்தில் ஒருவரை ஒருவர் விரும்பி இருக்கின்றனர்.ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.ஆனால் ஒரு சில பத்திரிகைகளில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே உல்லாசம் அனுபவித்து வந்தனர் என்று சொல்லப்பட்டது.
கமல்-ஸ்ரீதேவி விவகாரம்: நடந்ததை கூரிய பிரபலம்
அன்றைய காலகட்டத்தில் கமல்-ஸ்ரீதேவி காதல்,கல்யாணம் விவகாரம் காட்டு தீ போல் பரவத் தொடங்கியது.ஆனால் நாங்கள் காதலிக்கவில்லை,ரகசிய திருமணம் செய்யவில்லை என்று கமல் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஸ்ரீதேவி தனக்கு உடன் பிறவா தங்கை என கமல் விளக்கம் கொடுத்தார் என்று பிரபல திரை விமர்சகர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.