சேலம் மாவட்ட ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ள தகவல்! இந்த பகுதிகளுக்கு மட்டும் ரயில்கள் ரத்து!
கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது பயணிகள் ரயில் சேவையை மீண்டும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் லிருந்து கோவைக்கு இடையிலான பயணிகள் ரயில் கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு காவேரிலிருந்து ஆனங்கூர் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வரும் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் அதன் காரணமாக கோவையிலிருந்து சேலம் பயணிகள் சிறப்பு ரயில் வண்டி எண் (06802) ஜூலை 13 தொடங்கி 24 வரை ஈரோட்டில் லிருந்து சேலம் வரும் பகுதி வழியாக வரும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கோவைகளில்லிருந்து ஈரோடு இரயில் மட்டுமே இயக்கப்படும்.என தெரிவித்துள்ளது. அதேபோல் சேலம்மிருந்து கோவை பயணிகள் சிறப்பு ரயில் வண்டி(06803) ஜூலை 13 தொடங்கி வரும் 24 வரை சேலம் மில்லிருந்து ஈரோடு இடையே இயக்கம் தொகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதற்க்கு மாறாக ஈரோட்டில் இருந்து கோவைக்கிடையே ரயில் இயக்கப்படும் எனவும் சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.சேலம் மாவட்டம் ரயில் பாதை பராமரிப்பு பணிக்காக சேலமில்லிருந்து கோவை இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் ஜூலை 13 முதல் 24 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது இதற்கு மாறாக இரு மார்க்கத்திலும் கோவையிலிருந்து ஈரோடு வரும் ரயில் மட்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.