இன்று முதல் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

0
144

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்ற நிலையில், நாளை வரையில் மழை வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இன்று வட தமிழகம், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ரேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் உள்ளிட்ட தினங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. என்றும் வரும் 16ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓர் இரு பகுதிகளில் சார்ந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரத்தின் ஒரு சில பகுதிகள் இடி மின்னலுடன் கூடிய வேசான்று முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

அதிகபட்ச வெப்பநிலை 34.35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரையில் கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் இன்று ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.