பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்!

0
226
Information published by the Department of Education! Special class is mandatory for them!
Information published by the Department of Education! Special class is mandatory for them!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமகா நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடக்க உள்ளது.எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் செய்முறை  தேர்வு தொடங்கப்படவுள்ளது.

மேலும் பொது தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களை விட அரசு பழங்குடியின பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என பழங்குடியினர் நலத்துறைக்கு தரவுகள் கூறுகின்றது.அதன் காரணமாக பள்ளியில் இடையில் நடத்தப்பட்ட தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என அரசு பழங்குடியின பள்ளிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றது.அதனை தொடர்ந்து இந்த சிறப்பு வகுப்புகள் குறித்து மாணவர்களின்  பெற்றோருக்கு ஆசிரியர்கள் எடுத்து கூற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Previous articleடிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! 
Next articleஇனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!