வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்!
நேற்று அமைச்சர் சு.முத்துசாமி சென்னை,நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.இதில் வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உடனிருந்தார்.மேலும் அந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த இடத்தில் 62 வீடுகள் இருந்தது.இந்த வீடுகள் அனைத்தும் மிக பழுதடைந்தது.அதன் காரணமாக அந்த வீடுகள் அகற்றப்பட்டது.புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.
96 சென்ட் நிலத்தில் 102 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.அதில் பத்து சதவீத பணிகள் மீதமுள்ளது. கூடிய விரைவில் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அதற்கு ஒப்பந்ததாரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.102 வீடுகள் விற்கப்படுகின்றது.வாங்கியவர்கள் ஏதேனும் குறைகூறினால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பகுதியில் 1.48 லட்சம் சதுரடி பரப்பில் 1,192 முதல் 1,542 சதுர அடி வரையிலும் வீடுகள் உள்ளது.சதுர அடி ரூ9,892 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு வீடு ரூ1.38 கோடி முதல் ரூ1.52 கோடி வரை விற்கப்படுகிறது.வீட்டு வசதி வாரியம் சார்பில் 135 இடங்களில் வாடகை வீடுகள் உள்ளனர்.இதில் 61 இடங்களில் வாடகை குடியிருப்புகள் பழுதடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு வசதி வாரிய இடங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றது.இனி செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகள் அனைத்தும் விற்க வேண்டும்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நெல்லை,புதுக்கோட்டையில் காலிமனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.நிலம் அதிகம் வைத்திருப்பவர்களிடம் இருந்து விருப்ப அடிப்படையில் இணைந்து செயல்படும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நிலம் மேம்பாட்டுப்பணிகளை வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் என தெரிவித்தார்.