பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் கவனத்திற்கு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அனைத்தும் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 11 வகுப்பு பொதுத் தேர்வுக்கு பதிவு செய்த 8,85051 மாணவர்களில் 41,366 மாணவர்கள் வரவில்லை.
மேலும் 83 ஆயிரத்து 811 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதில் 7,59, 774 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களும் தேர்வு எழுத வராதவர்களும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 174 மாணவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் 11ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 18000 மாணவர்கள் முந்தைய ஆண்டு பள்ளி செல்லம் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முன்னெடுப்புகள் மூலம் பல்வேறு வகுப்புகளுக்கு மீண்டும் சேர்க்கப்பட்ட ஒரு லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களின் உள்ளடங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களில் 78 ஆயிரம் மாணவர்களை இன்றைக்கு தேர்வு எழுத வைத்திருக்கிறோம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று ஆர்வமூட்டி உயர் கல்விக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் போன்ற செயல்பாடுகளால் பொது தேர்வுக்கு வராதவர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களில் இருந்து 78 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்.
வரும் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கும் பொழுது குறைந்தபட்சம் வருகைப் பதிவை 75 சதவீதம் பின்பற்ற வேண்டும். துணை தேர்வு எழுதி இருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்க சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், வட்டார பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்து பொது தேர்வு எழுத மாணவர்களை கண்டறிவதற்கான வழிகளை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.