சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இனி நள்ளிரவிலும் பயணம் செய்யலாம்?

Photo of author

By Parthipan K

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இனி நள்ளிரவிலும் பயணம் செய்யலாம்?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ  சார்பில் நேரு உள்ள விளையாட்டு அரங்கில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை இரவு 7 மணி முதல் 11 30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் நேருவை விளையாட்டு அரங்கில் நடைபெற இருப்பதால் நிகழ்ச்சியை கண்டு களிக்க வரும் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நாளை இரவு 11 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை ஆனது நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நாளை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும்  இடத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும், பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்டு களிக்க மெட்ரோ ரயில்களில் வரும் மெட்ரோ பயணிகள் கியூஆர்  குறியீடு பயணச்சீட்டை மற்றும் பயன அட்டைகளை பயன்படுத்தி 2௦  சதவீத கட்டணம் தள்ளுபடி பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவை நாளை டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். அதன் அடிப்படையில் விமான நிலையம் மெட்ரோ, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ, டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ கடைசி ரயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.