மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மீண்டும் படையெடுக்கும் கொரோனா தொற்று! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்துகளும் கல்வி நிறுவனங்களும் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மக்கள் மீண்டும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால்தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் மார்ச் 8ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தொற்று பாதிப்பு மார்ச் 15ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 258 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 15 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 1.99 சதவீதம்  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா பரிசோதனை நோயாளிகள் கண்காணிப்பு கொரோனாவுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் பணி போன்றவை தீவிர படுத்த வேண்டும் அதனை கண்காணிக்க வேண்டும்.

தொற்று பரவலை தீவிரமாக கண்காணிப்பதோடு மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம் என கூறப்பட்டிருந்தது. மேலும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தமிழகத்தை போன்று கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.