தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்!

0
182
Information released by Southern Railway! Booking for special trains going here starts today!
Information released by Southern Railway! Booking for special trains going here starts today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இங்கு செல்லும் சிறப்பு ரயிகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த வாரங்களில் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் விடுமுறை நாட்களை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில் மற்றும் கூடுதல் ரயில் சேவை அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கொரோனா பெருந்தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பெரிதளவு பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்தது அதனால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பினார்கள்.

இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 26 ஆம்தேதி குடியரசு விழா கொண்டாடப்படவுள்ளது.அதனால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதன் காரணமாக தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு வரும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25 ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள்  காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.அதனையடுத்து ஜனவரி 29 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9 மணிக்கு திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கபட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி!
Next articleமத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!