மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

0
280
Information released by the central government! Attention government employees!
Information released by the central government! Attention government employees!

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தற்போது விலைவாசி உயர்வை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கபடுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீதம் உயர்த்தி அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

மேலும் கோடிக்கு மேற்பட்ட பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம் அகவிலைப்படியை பெறும் தகுதியை பெற்றனர்.இந்நிலையில் தற்போது அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு 4.23 சதவீதமாக இருக்க வேண்டும்.ஆனால் மத்திய அரசு தற்போது நான்கு சதவீதம் மட்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

42 சதவீதம் அகவிலைப்படி முன்மொழிவை மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சகத்தின் செலவினத் துறை சமர்பிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.மேலும் நான்கு சதவீத அகவிலைப்படி உயரும் நடப்பாண்டில் தொடக்கம் முதலே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇபிஎஸின் ரகசிய திட்டம் வெற்றி! சிக்கலில் ஓபிஎஸ்!!
Next articleஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை சின்னத்திற்கு பிரசாரம் செய்வோம் – ஓபிஎஸ் தரப்பு அந்தர் பல்டி!