போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு!
கடந்த வாரம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை அடுத்து நாளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் சிறப்பு கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் பள்ளிகளுக்கு மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளனர்.
இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி முடித்த பிறகு நாளை வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.மக்களின் தேவை அதிகரித்து வருவதினால் கடந்த நவம்பர் மாதம் ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்தது.
ஆனாலும் ஆம்னி பேருந்துகள் நிரம்பி விட்ட நிலையில் தான் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில்,தூ த்துக்குடி, மதுரை ,திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, ஈரோடு, பெங்களூர், திருப்பூர் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நாளை 500 சிறப்பு பேருந்துகளும்,திங்கட்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் செய்யப்பட்டு வருகின்றது.இன்று பயணம் செய்ய 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.இதில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப மட்டும் 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஜனவரி 1 ஆம் தேதி பயணம் செய்ய 22 ஆயிரம் பேரும்.இரண்டாம் தேதிக்கு பத்தாயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவது போல இங்கிருந்து பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.அதனால் இன்று முதல் மூன்று நாட்கள் பேருந்து,ரயில்களில் கூட்டம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.