உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள்  இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்!

0
265
Information released by the Supreme Court! Lawyers must download this app!
Information released by the Supreme Court! Lawyers must download this app!

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள்  இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்!

உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழக அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில்சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 என்ற செயலி ஆண்டராய்டு போன்களில் தயாராக உள்ளது.இந்த மொபைல் செயலியை நாம் மொபைலில் வைத்துள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த செயலியில் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளது.இந்த சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 செயலி வரும் வாரத்தில் ஆப்பிள் மற்றும்  ஐஓஎஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.மேலும் இதனை அனைத்து சட்ட அதிகாரிகளும் தங்களது சொந்த அணுகலை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை வழக்கறிஞர்கள்  மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்களின் சட்ட அதிகாரிங்கள் தெரிந்து கொள்ள இந்த செயலி உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் தங்களின் வழக்கு நிலை எவ்வாறு உள்ளது ,உத்தரவு ,தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை ஆகியவற்றை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Previous articleஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!
Next articleஎன்எல்சிக்கு ஆதரவாக மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்