நெஞ்சில் உள்ள கர் கர் சளியை விரட்ட இப்படி ஒரு முறை ஆவி பிடியுங்கள்.. 100% நிரந்தர தீர்வு!!

Photo of author

By Rupa

நெஞ்சில் உள்ள கர் கர் சளியை விரட்ட இப்படி ஒரு முறை ஆவி பிடியுங்கள்.. 100% நிரந்தர தீர்வு!!

மழைக்காலம் வந்து விட்டாலே நமது உடலில் கெட்ட பாக்டீரியாக்கள் எளிமையான முறையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சளி இருமல் காய்ச்சல் போன்றவை அதிகரித்து காணப்படும். அதிலும் நெஞ்சு சளி ஏற்பட்டு விட்டால் அதனை சுலபமாக சரி செய்ய முடியாது. பல வீட்டு வைத்திய முறையை கையாள வேண்டி இருக்கும்.அதேபோல தண்ணீரை மாற்றி அருந்துதல் குளம் ஏரி போன்ற தண்ணீரில் குளித்தல் போன்றவையும் சளியை ஏற்படுத்தும் ஒரு காரணி தான். இதனை ல்லாம் ஆவி பிடித்தல் மூலம் எளிமையாக சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
ஆடாதேடை
நொச்சி இலை
நிலவேம்பு இலை
முடக்கத்தான்
மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் பொடி

மேலே கொடுக்கப்பட்டுள்ள இலைகள் அனைத்தும் ஒரு கைப்பிடி அளவு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு தண்ணீர் கொதிக்கும் பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
மேற்கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் பொடி மிளகு சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் வரும் ஆவியை அப்படியே சுவாசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மார்பு சளி ஆனது முற்றிலும் குணமாகும்.
அதுமட்டுமின்றி சூடு குறைந்ததும் அதில் உள்ள இலைகள் அனைத்தையும் ஒரு துணியில் கட்டி முதுகின் பின்புறம் மற்றும் நெஞ்சில் ஒத்தடம் கொடுக்கும் பொழுது மார்பு சளி முழுமையாக நீங்கும்.