பிரபல நடிகை தாக்கியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!!

0
249
Injured person admitted to hospital after attack by famous actress..!!
Injured person admitted to hospital after attack by famous actress..!!

பிரபல நடிகை தாக்கியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!!

கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான படம் தான் சுந்தரா டிராவல்ஸ். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ராதா. இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் ராதா நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில், அவரின் திருமண வாழ்க்கையிலும் ஏதோ பிரச்சனை ஏற்பட தற்போது தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புகளும் கிடைக்காததால் இவர் இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ராதா நிஜ வாழ்க்கையிலும் வில்லியாகவே மாறிவிட்டார் போலும். அடுத்தடுத்து இவர் மீது அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கஞ்சா போதையில் தன்னை பார்த்து ஆபாச சைகை செய்ததாக கூறி ராதா அந்த நபரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

தற்போது முரளி என்பவர் நடிகை ராதா மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக நடிகை ராதா தாக்கியதில் முரளி பலத்த காயமடைந்துள்ளார். தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் முரளி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து நடிகை ராதா மீது இதுபோன்ற புகார்கள் எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleBreaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!!
Next articleநிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!