புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்!

Photo of author

By Rupa

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்!

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இந்த நிலையில் மக்கள் நலன் கருதி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144  தடை விதித்துள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் ஓர் நாளில் மட்டும் 20000 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 24 மணி நேரத்தில் மட்டும் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்ற ஆண்டு இதே போல் கொரோனா தொற்றினால் முழு ஊரடங்கை அமல்படுத்திய காரணத்தினால், அனைத்து கடைகளும் மூடும் நிலை ஏற்பட்டது.மக்கள் வாழ்வாதாரத்தை  நடத்துவதே பெரும் சவாலாக இருந்தது.இந்நிலையில் கொரோனா தொற்றானது குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரபித்தனர். மீண்டும் கொரோனா தொற்றானது பரவும் அபாயம் ஏற்பட்டு மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

அதனையடுத்து சென்னை மெரினாவில் உள்ள கடைகளையெல்லாம் அகற்றிவிட்டு ஸ்மார்ட் கடை வைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதனால் மெரினாவில் உள்ள தற்போதைய கடைகளை அகற்றிவிட்டு ஸ்மார்ட் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரரிவித்து மெரினா கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரினா கடைகளை அகற்றுவதால் அம்மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும்.இந்த போராட்டத்தினால் காமராஜர் சாலையில் வெகு நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும் மெரினா கடற்கையில் தற்போது கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு 900 கடைகளை ஒதுக்கி தந்தாலும் அதில் 40% வெளி நபர்களுக்கு கொடுத்ததற்கும் மக்கள் குற்றம் சாட்டினர்.அம்மக்களின் உரிமைகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.