இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்!
பெண்கள் இன்ஸ்டாகிராமில், பதிவிடும் வீடியோக்கள், ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கலர், கலர் ஆடைகளில் பல பலக்கும் முகத்தோற்றத்தில் ஓவர் மேக்கப்பில் ரீல்ஸ் போடும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. பெண்கள் இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், ஏன் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இளைஞர்களும் தங்கள் பங்குக்கு மாஸ் காட்டும் விதமாக தனது நண்பர்கள் உதவியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர் ஆண்களும், பெண்களும் கெத்து காட்டும் விதமாக ரீல்ஸ் வீடியோ பதிவிடும் பழக்கமும் இன்ஸ்டாகிராமில் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் மட்டும் இல்லாமல் பேஸ்புக், யூடிப் போன்ற இதர சமூக வலைத்தளங்களிலும் ரீல்ஸ் வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. தங்கள் திறமையை காட்டுவதாக நினைத்து இளைஞர்கள் செய்யும் வீடியோ குறிப்பாக பெண்கள் செய்யும் ரீல்ஸ் வீடியோ, அவர்களுக்கு தெரியாமல் பின் நாளில் ஆபத்தாக முடிகிறது.
முன்பு போலி சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் மிரட்டுவது பெண்களின் படங்களை தவறாக பயன்படுத்துவது என்று புகார்கள் வந்தன. இப்போது நிஜ கணக்குகள் மூலமே சிலர் பல்வேறு குற்ற சம்பவங்களை செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பளபளக்கும் ஆடைகளில் உடல் அங்கங்கள் தெரியும்படி ரீல்ஸ் போடும் பெண்களின் வீடியோக்கள் ஆபாச வலைத்தளங்களில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராமிலும் மற்ற சமூக வலைத்தளங்களில் சொந்த விருப்பத்தின் பெயரில் பதிவிடும் வீடியோக்களை கவனமாக பதிவிட்டு பெண்கள் தங்கள் திறமையை காட்டுவதாக நினைத்து பதிவிடும் வீடியோக்கள் அந்தரங்க வீடியோக்களாக சித்தரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே பெண்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.