Low BP பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! 100% பலன் தரும் வீட்டு வைத்தியம்!!

0
1

குறை இரத்த அழுத்தம்: நமது உடலில் இரத்த அழுதத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது முக்கியம்.இரத்த அழுத்தத்தில் உயர் இரத்த அழுத்தம்,குறை இரத்த அழுத்தம் என்று இருவகைகள் இருக்கிறது.இவை இரண்டிற்கும் மருந்து,மாத்திரை இருக்கின்றது.

இந்த இரத்த அழுத்தத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்?

1)அடிக்கடி தலைசுற்றல்
2)உடல் சோர்வு
3)கண் பார்வை குறைபாடு
4)கடும் தலைவலி
5)உணவு சாப்பிட்ட பிறகு மயக்க உணர்வு

குறை இரத்த அழுத்தத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம்

**வாழைப்பழம்
**பால்
**தேன்

ஒரு கிளாஸ் பசும் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பின்னர் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.பின்னர் அரைத்த வாழைப்பழத் துண்டுகளை பாலில் போட்டு ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேன் கலந்து பருக வேண்டும்.

இந்த வாழைப்பழ பாலை தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு இரவு நேரத்தில் பருகி வந்தால் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

**பாதாம் பருப்பு
**பால்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பால் நன்றாக கொதித்து வந்த பிறகு நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பாதாம் பால் கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு மாற்றி பருகினால் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

Previous articleஎந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!
Next articleவயிற்று ஊளைச்சதை கரைய.. இந்த ஒரு ஜூஸை தினமும் படுக்கும் முன் குடிங்க!!