பத்து நிமிடத்தில் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
வாயுத்தொல்லை உங்களை நிம்மதியாகவே இருக்க விடாது. இது வந்து விட்டாலே உங்கள் வயிற்றுக்கு சிக்கல் தான். எப்பொழுதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். பாறாங்கல்லை வயிற்றில் கட்டி விட்டது போல் வலிக்கும்.
அடிக்கடி வாயு தொல்லை, வயிறு மந்தம், ஏப்பம் முதலியன ஏற்படுகிறது என்றால் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். வாயு தொல்லை உள்ளவர்கள் பருப்பு வகைகள் கிழங்கு வகைகள் முதலியவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. வறுத்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
இதை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்தியத்தை பார்ப்போம்.
* சுக்கு- வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த அருமருந்து.
* முக்கால் ஸ்பூன் ஓமம்
* பத்து மிளகு
* 15 பூண்டு பற்கள் தோல் உரித்தது.
* பால்
சுக்கு, மிளகு, ஓமம் மூன்றையும் கல்லில் இட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் பாலை சேர்க்கவும். பின்னர் இதில் 15 பூண்டு பற்களை சேர்க்கவும். பால் ஓரளவு கொதிக்க ஆரம்பித்ததும் இடித்து வைத்த கலவையை பாலில் சேர்க்கவும். பின்னர் சுவைக்கு நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.
பூண்டு பற்கள் இரண்டு வேகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சவும். நன்கு கொதிந்ததும் இறக்கி ஆறவிடவும். மிதமான சூடு இருக்கும் பொழுது ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.
அதில் உள்ள பூண்டு பற்களை மென்று சாப்பிட வேண்டும். இந்த பானத்தை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் குடிக்க வேண்டும்.