இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா திருக்கோ கர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி காயத்ரி என்கிற காயத்ரி தேவி. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியினை சேர்ந்தவர் கமலக்கண்ணன். காயத்ரி அவ்வப்போது தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
அடிக்கடி அம்மா வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு பேசி வந்துள்ளார். அப்போது இருவருக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த மணிகண்டன் கள்ளக்காதலனை எச்சரித்துள்ளார். பின்னர் இதைப்பற்றி காயத்ரி தேவியிடம் செல்போனில் கூறியதை தொடர்ந்து மணிகண்டனை மது அருந்த செய்து அவரை தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
கரூரை அடுத்த மணல்மேடு பகுதிக்கு மணிகண்டனை அதிக மதுவை குடிக்க வைத்து அழைத்து சென்றுள்ளார். அப்போது மணிகண்டனைபார்த்து காயத்ரி என்னுடைய காதலி என்றார். தன்னுடைய மனைவியை நீ காதலிப்பதா?என்று கூறி பெரும் கோபமடைந்தார். மது போதை உச்சத்திற்கு சென்ற நிலையில் இருவருக்கும் கை தகராறு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த கட்டை மற்றும் கற்களை எடுத்து மணிகண்டனை தாக்கியுள்ளார் கமலக்கண்ணன். இதனால் பாதிக்கப்பட்ட கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இவருடன் ஈடுபட்ட ரூபன் என்பவர் மற்றும் காயத்ரி தேவி ஆகிய மூவரையும் அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் மணிகண்டனை கள்ள காதலுக்காக கொலை செய்ய திட்டம் போட்ட காயத்ரி தேவி, கமலக்கண்ணன் ஆகிய இருவரையும் கொலை வழக்கில் பதிவு செய்து ஆயுள் தண்டனை விதித்தும் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பு வழங்கியது.மேலும் ரூபனை விடுதலை செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுதியது.