கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது – ஓ.பன்னீர் செல்வம்!

0
189
#image_title

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது, எந்தச் சூழலிலும், யாராலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

திருச்சி மாநாடு தமிழ்நாடு முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது; அடுத்த கட்ட மண்டல மாநாடு குறித்தும் , மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் இன்று ஆலோசிக்க உள்ளதாக என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் , கு.ப.கிருஷ்ணன் , மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் இணைந்து வழங்கினார் .

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் நடைபெற்ற மாநாடு தொண்டர்களின் எழுச்சி மாநாடாக அமைந்த்து, திருச்சி மாநாடு தமிழகம் முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் , மண்டல வாரியாக மாநாடு நடத்துவது குறித்தும் இன்று ஆலோசிக்க உள்ளோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நிலையிலும் , எந்த சூழலிலும் யாராலும் அவமதிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது , கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடுமையான கண்டனத்திற்குரியது.

12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா குறித்து சட்டமன்றத்தில் நான் பேசும்போது தொழிற்சாலைகளின் வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கின்ற சூழலில் , தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் 12 மணி நேரம் வேலை மசோதா இருக்க வேண்டும் என்பதால் அதை சிறப்பு குழுவிற்கு அனுப்பி ஆராய வேண்டும் என சொல்லி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleபள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!
Next articleதிமுக ஆட்சி அமைந்த பிறகு சமயபுரம் கோயில் டெபாசிட் தொகை குறைந்துள்ளதாக புகார் !