பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

0
108
#image_title

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலிஸ்சாரின் நடவடிக்கை கண்டிக்க தக்கது என நீதிபதி கூறியுள்ளார்.

சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (விசாரணை அதிகாரி) நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இவ்வாறு  மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் கூறியதாவது,என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும்போது, இதே பகுதியைச் சேர்ந்தவரும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜெயகுமார் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி, மனஉளைச்சலில் என் மகள் இருந்தார். இதற்கிடையே எங்கள் வீட்டு செல்போனுக்கு தொடர்ந்து அறுவறுக்கத்தக்க குறுஞ்செய்தியை அனுப்பி ஜெயகுமார் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனது புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யும்படி தென்காசி மாவட்ட போலீஸ்சூப்பிரண்டுவிடம் முறையிட்டோம். அதன்பின் ஒரு மாதம் கழித்து கடந்த டிசம்பர் மாதத்தில் ஜெயகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

ஆனால் அந்த வழக்கில் முறையாக விசாரிக்காமல் 5 மாதங்களாக கிடப்பில் போட்டு உள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெயகுமார் மீதான பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரனையின் போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறிய நீதிபதி இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஜூன் மாதம் 1-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

author avatar
Savitha