பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மூலம் மக்களுக்காக இலவச சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்க வேண்டும் என்பதற்காக 2017 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டமானது கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆயுஷ்மான் அட்டையை வைத்திருக்கக்கூடிய குடும்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த அட்டையின் மூலம் பணம் இல்லாமல் மருத்துவ காப்பீடு பெற முடியும் என்றும் அதே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடுமையான நோய்கள் தாக்கப்பட்ட இருந்தாலும் இந்த அட்டையை பயன்படுத்தி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
பலருக்கும் இந்த அட்டையின் மூலமாக புற்று நோய்க்கு சிகிச்சை அளித்துக் கொள்ள முடியுமா என்பதன் போன்ற பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கக் கூடியவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயனாளிகள் ஒரு வருடத்தில் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் மட்டும் பயனாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தில் உறுப்பினர்கள் எத்தனை பேர் இருந்தாலும் மொத்தமாகவே அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வருடத்திற்கான காப்பீடாக 5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட இருக்கக்கூடிய நிலையில் பாஜகவின் ஆட்சியின் கீழ் இருக்கக்கூடிய டெல்லியில் மட்டும் ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கி வருவது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.