கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் பணி!!! விரைவில் தூவங்குகின்றது ஆவின் நிறுவனம்!!! 

0
99
#image_title

கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் பணி!!! விரைவில் தூவங்குகின்றது ஆவின் நிறுவனம்!!!

கறவை மாடுகளுக்கும், பால் ஏஜெண்டுகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ஆவின் நிறுவனம் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

கறவை மாடுகள் இறந்து போவதால் பால் உற்பத்தி செய்பவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது. கால்நடைகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பால் உற்பத்தி செய்யும் தொழிலை கைவிடும் நிலைக்கு செல்கின்றனர். எனவே கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில் பசுக்கள், கோழிகள், எருமைகள், ஆடுகள் போன்ற கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகின்றது. தற்பொழுது கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்யும் பணியை தற்பொழுது ஆவின் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கட்டணமாக ஆவின் நிறுவனம் வசூல் செய்கின்றது. இதில் 25 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மானியத்தை மத்திய அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றது.

ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யும் திட்டத்தை நடப்பாண்டு 50 சதவீதம் கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளது. கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து ஆவின் அதிகாரிகளுக்கு நந்தனத்தில் அமைந்துள்ள ஆவின் தலைமையகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்குவது போலவே ஆவின் பால் ஏஜென்ட்களுக்கும் ஆயுள் காப்பீடும், விபத்து காப்பீடும் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டம் குறித்து வங்கிகளிடம் ஆவின் நிறுவனம் கருத்து கேட்க முடிவு செய்து இருக்கின்றது.

கால்நடைகளுக்கும், ஆவின் பால் ஏஜென்ட்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள பால் ஏஜென்ட்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் அவர்கள் கூறியுள்ளார்.

 

Previous articleமக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!
Next articleஅதிரடியான நிபந்தனை வைத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!! அதிர்ச்சியில் உறைந்த சோனியா காந்தி!!!