விமானப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவரா? உடனே விண்ணப்பியுங்கள்!!
தற்போது மத்திய அரசு அறிவித்தபடி நாட்டை பாதுகாக்கும் முப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.அதற்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்குகிறது.நான்கு ஆண்டுகள் பணியாற்ற அக்னிபத் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் விண்ணபித்த இளைஞர்கள் அனைவருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பபடும்.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள்களுக்கு மட்டும் தீவிர பயிற்சி அளிக்கப்படும் . எனவே விருப்பம் உள்ளவர்கள் விமானப்படையில் சேர்வதற்கு ஆன்லைன்களில் விண்ணப்பப் பதிவுசெய்து கொள்ளலாம். இந்த விண்ணப்ப பதிவானது வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. Indianairforce.nic.in, career indianairforce.cdac.in,agnipathvayu.cdac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் .
அதிகாரபூர்வமாக 17 வயது முதல் 21 வயது உட்பட்ட இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூலை 7 ஆக அறிவித்தது . மேலும் அக்னி வீரர்களுக்கு முதல் ஆண்டில் 30,000 , இரண்டாம் ஆண்டில் 33,000 ,மூன்றாம் ஆண்டில் 36,500 மற்றும் நான்காம் ஆண்டில் 40,000 என்று மாத சம்பளமாக வழங்கப்படும் . நான்கு ஆண்டுகள் வரை பணியாற்றிய அக்னி வீரர்களுக்கு இறுதியில் 11.71 லட்சம் ரூபாய் வரை சேவா நிதியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.