சட்டப் படிப்பில் சேர விரும்புவார்களா? இதுவே கடைசி தேதி!
அம்பேத்கர் பல்கலைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்த ஆண்டிற்கான 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆன்லைனில் விண்ணப்பிக்க அதற்கான ஆரம்ப தேதி 12.07.2022 விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப்படிப்பில் சேர, 12.07.2022 ல் லிருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, 10 அரசு சட்ட கல்லுாரிகளிலும், ஒரு தனியார் சட்ட கல்லுாரியிலும், இளநிலை சட்டப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவற்றில் பிஏஎல்எல்பி(ஹானஸ்),டிகிரி நேரம், , பிபிஏ டிகிரி நேரம், பிகாம் (ஹானஸ்) டிகிரி நேரம், பி சி ஏ(ஹானஸ்) டிகிரி நேரம், ஆகிய ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளும், எல் எல் பி, என்ற மூன்றாண்டு படிப்புகளும் நடத்தப்படுகின்றது.
இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகின்றது. இதில் 5 ஆண்டு சட்டபடிப்புகளான ,பிஏஎல்எல்பி(ஹானஸ்),டிகிரி நேரம், , பிபிஏ டிகிரி நேரம், பிகாம் (ஹானஸ்) டிகிரி நேரம், பி சி ஏ(ஹானஸ்) டிகிரி நேரம், ஆகியவற்றிக்கு மட்டும் விண்ணப்பிக்க ஜூலை 12 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஹானஸ் அல்லாத எல்எல்பி, என்ற, மூன்றாண்டு படிப்புகளும் , எல்எல்பி, என்ற இரண்டு ஆண்டு படிப்புகளும் சேருவதற்கான அட்மிஷன் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 12 முதல் ஜூலை 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பங்களை, 10 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்ட கல்லுாரியில், உரிய கட்டணம் செலுத்தி பெறலாம். நேரில் விண்ணப்பம் பெற்று, அதை அஞ்சல் வழியில் அனுப்பலாம்.மேலும், ‘ஆன்லைன்’ வழியிலும், விண்ணப்பிக்கலாம். அதற்கான வசதிகள், அம்பேத்கர் கழகத்தின் அதிகாரபூர்வமான http://tndalu.ac.in என்ற, இணையதளத்தில் உள்ளன. தகுதி வாய்ந்தோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டுமென அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.