‘என் ஆலோசனையைக் கேட்டு கோலி செய்த மாற்றம்’… பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் கருத்து

0
53

‘என் ஆலோசனையைக் கேட்டு கோலி செய்த மாற்றம்’… பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் அவ்ட் தற்போது கிரிக்கெட் உலகில் அதிக விவாதங்களை எதிர்கொண்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

அதே சமயம் கோலிக்கு ஆதரவான கருத்துகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் முஷ்டாக் அகமது கோலி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் அளித்த நேர்காணலில் “இங்கிலாந்தில் கோலியை ஒரு முறை சந்தித்து பேசி கொண்டிருந்தேன். பொதுவான சில  விஷயங்களைப் பேசிக்கொண்டு அவரின் ஆட்டத்தில் இருக்கும் சில குறைகளை சொன்னேன். குறிப்பாக போட்டியின் தொடக்கத்தில் அவரின் முன்னங்கால் பந்தின் திசைக்கு ஏற்ப இல்லாமல் நேராக இருப்பதால் எட்ஜ் ஆகி அவுட் ஆகிறார் என்று கூறினேன்.

அதை கூர்மையாகக் கேட்டுக்கொண்ட அவர் அடுத்து வந்த ஆட்டங்களில் அதை மாற்றிக்கொண்டு ரன்களைக் குவித்தார்” என்று கூறியுள்ளார்.