மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம்! ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!!

0
296
#image_title

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம் ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!! வலைத்தளங்களில் வைரல்!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தெற்கு கொட்டகை கிராமத்தில் உள்ள பர்மா பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று 9_ம் தேதி பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் சின்ன மாடு பந்தயத்தில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரகிரியை சேர்ந்த லிங்கம் என்பவரின் இரட்டை மாட்டுவண்டியும் கலந்து கொண்டது.

பந்தயம் ஓடிக் கொண்டிருக்கும்போது லிங்கம் வண்டியின் வலது சக்கரம் கழன்று ஓடிய நிலையிலும் வெற்றி இலக்கை நோக்கி அந்த 2 மாடுகளும் நோக்கி ஓடத் தொடங்கியது.

ஒரு சக்கரத்துடன் ஓடி 4_வது பரிசான 5001 ரூபாய் பரிசை தட்டி சென்றது. மாடுகளை சாரதி அடிக்காத நிலையிலும் பொறுமையாக ஓடி நான்காவது பரிசை தட்டி சென்றது மாட்டு வண்டி பந்தய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சக்கரம் கழன்று போகாமல் இருந்திருந்தால் இந்த மாட்டு வண்டி முதல் பரிசை தட்டி இருக்கும்.

அதன் வீடியோ தற்போது இப்பகுதியில் வலைத்தளங்களில் வெகு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

Previous articleதென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!
Next articleதுபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!