தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!

0
147
#image_title

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி தொகுதி தென்காசி நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தினை விரிவுபடுத்த அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 891 மக்கள் தொகை உள்ளதாகவும், ஒரு நபருக்கு 135 லிட்டர் என கணக்கிட்டு தென்காசி நகராட்சிக்கு 10.65 மில்லியன் லிட்டர் ஒரு நாள் குடிநீர் தேவை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பிலும் குடிநீர் வழங்கல் துறை சார்பிலும் 6.2 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், 107 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்தப்பட்ட திட்டத்தின் மூலமாக 78 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்.

அனைவருக்கும் குடிநீர் வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், திட்ட மதிப்பீடு தயார் செய்து நிதி ஆதாரத்திற்காக சென்றுள்ளதோடு நிதி ஆதாரம் பெறுவதற்காக காத்திருக்கிறோம் என்றும், இன்னும் ஒரு மாத காலத்தில் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

author avatar
Savitha