Crime

பெண்களே உஷார்.! இணையத்தில் நட்பாக பழகி பணம்பறித்த நாடக கும்பல் கைது!

பிரபல சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு கும்பல் திட்டமிட்டு பெண்களுடன் பழகி அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம்பறிப்பதாக காவல்துறைக்கு புகார் வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி அவர்களின் பிரத்யேக நம்பருக்கு ஒரு கும்பல் தன்னை மிரட்டி பணம்பறிப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திட்டமிட்டு பணம்பறிக்கும் நாடக கும்பலை காவல்துறை கண்காணித்தபோது, இணையத்தில் பெண்களுடன் நட்பாக பேசி அவர்களின் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக உருமாற்றி சம்பந்தபட்ட பெண்களிடம் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்த கும்பலை பிடிக்க ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த கும்பலின் இணைய கணக்கு, வங்கி பரிவர்த்தனை உள்ளிட்டவை காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டது. இதன்மூலம் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கீழக்கரையைச் சேர்ந்த முகைதீன் என்பவன் தலைமையில் பணப்பறிப்பு கும்பல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புகாரின் தொடர்பாக முகமது முகைதீன், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசல், நாகப்பட்டினம் முகமது ஜாசிம் உட்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த இருவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவு பேரில் சிறையில் அடைத்தனர்.

Leave a Comment