பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!
நெல்லை மாவட்டம் பனகுடி ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பணத்தை அபகரித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இணையத்தில் இணையத்தில் லொகாண்டோ என்ற வேலைவாய்ப்பு அப்ளிகேஷன் மூலம் தனது ராஜதந்திர ஏமாற்று வேலையை நடத்தியுள்ளார் ரீகன். இவரது முழுப்பெயர் வள்ளல் ராஜ்குமார் ரீகன் என்று கூறப்படுகிறது. லொகாண்டோ ஆப் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தனக்கான வேலையை தேடி வருகின்றனர். இதை தனக்கு சாதகமாக ரீகன் பயன்படுத்தியுள்ளார்.
வேலை தேடுவோரை குறிவைத்து பெண் பாலியல் ஆசைகளை தூண்டியுள்ளார். ஹாய் அலோ நான் பிரியா பேசுறேன்” என்று பெண் குரலில் பேசி பலரை மயக்கியுள்ளார். வழக்கம்போல ஆண்களிடம் பெண் குரலில் மிமிக்ரி செய்து வந்த ரீகன், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த உதயராஜ் என்பவரிடம் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன உதயராஜ் மதுரவாயல் காவல் நிலையத்தில் ரீகன் மீதான புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் கூறப்படுவதாவது:
சமீபத்தில் பிரியா என்ற பெண்மணி தனக்கு போன் மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் தொடர்ந்து போனில் பேசி செக்ஸ் சாட் வரை சென்றது. தற்போது பிரியா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணம் தரவில்லை என்றால் என்னுடன் சாட் செய்ததை பொதுவில் பதிவிட்டு மானத்தை வாங்குவேன் என்றும் பயமுறுத்துகிறார் என்று உதயராஜ் கூறியிருந்தார்.
மேலும், நான் வேலை தேடும் காரணமாக லொகான்டோ ஆப்- ல் பதிவு செய்திருந்தேன். அந்த இணையத்தில் செக்ஸ் சாட் செய்ய விருப்பமா என்று ஒரு தகவல் ஓபன் ஆனது. இதனையடுத்து அந்த நம்பரில் இருந்து பிரியா என்ற பெண்மணி செக்ஸ் பற்றி பேசினார். இவ்வளவு பணம் கொடுத்தால் போனில் பேசலாம், செக்ஸ் சாட் செய்யலாம் என்று கூறினார். இதனால் 100 ரூபாய் பணம் அவருக்கு அனுப்பிய உடனே ஒரு நிர்வாண புகைப்படம் ஒன்று வந்தது. பின்னர் செக்ஸ் வீடியோவுக்காக 1500 ரூபாய் கட்டச் சொன்னார். என்னால் முடியாது என்று கூறி அந்த நம்பரை பிளாக் செய்துவிட்டேன். எனக்கு மீண்டும் அதே நபரிடம் இருந்து மீண்டும் மிரட்டல் வந்தது. பின்னர் இது சம்பந்தமாக போலீசிடம் புகார் கூறியதாக தெரிவித்தார்.
உதயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரீகன் கைது செய்யப்பட்டார். பின்னர்தான் விசாரணையில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 2017 ல் இருந்து இதுபோன்ற ஏமாற்று வேலையில் ஈடுபட்டு 350 ஆண்களையும் ஏமாற்றிய சம்பவம் வெளியே வந்தது. இதனையடுத்து வள்ளல் ரீகன் சிறையில் அடைக்கப்பட்டார். தைரியமாக புகார் கொடுத்த உதயராஜை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.