இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பது போல இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் 4700 கிராம பஞ்சாயத்துகள் இடம் இருந்து இன்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் மாதம் 200 ரூபாய் செலவில் 100 Mbps அளவில் வேகம் கொண்ட இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த 4700 கிராம பஞ்சாயத்துக்களில் உரிய வசதிகள் இருக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து பரிசீலனைக்குப் பின் இன்டர்நெட் கனெக்சன் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்ததோடு 200 ரூபாய் கட்டணத்தில் இணையதள சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய வேலை பார்ப்பவர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இத்திட்டம் மிக பயனுள்ளதாக அமையும் என்றும் ஸ்மார்ட் வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய வீட்டிலும் இணையதளத்தை பயன்படுத்தி பல அறிவுப்பூர்வமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாக இத்திட்டம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.