இந்திய அணி தற்போது அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாட தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த 5 வது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் கோப்பை க்கு வாய்ப்பு உள்ளது. ஒரு வேலை தோல்வியடைந்தால் கோப்பை கனவு என்பது வெறும் கனவாகவே போகும்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி உடனான தோல்வி மற்றும் இலங்கை அணியுடனான தோல்வி மற்றும் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. இதனால் உலக டெஸ்ட் கோப்பை கனவு குறைந்து கொண்டே வரும் நிலையில் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகள் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பின் தான்.
இந்நிலையில் பிசிசிஐ இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரிடமும் தொடர் தோல்விகள் குறித்தும் மூன்றாவது போட்டி முடிந்த பின் இந்திய அணியின் முக்கிய வீரர் பார்க்கப்படும் ரவி அஸ்வின் அடிலெய்டு மைதானத்தில் போட்டி நடந்து முடிந்த பின் யாரும் எதிர்பாராத வகையில் தனது ஓய்வை அறிவித்தது குறித்தும் இருவரிடமும் பிசிசிஐ தீவிர விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை இந்த தொடரின் 5வது போட்டியானது சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது.