ஜனவரி 11 முதல் Cognizant நிறுவனத்தில் இன்டர்வியூ!! இந்தியாவில் உள்ள அனைவருக்குமான வாய்ப்பு!!

0
115
Interview at Cognizant from 11th Jan!! Opportunity for everyone in India!!
Interview at Cognizant from 11th Jan!! Opportunity for everyone in India!!

Cognizant ஐடி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான இன்டர்வியூ வருகிற ஜனவரி 11-ம் தேதி கோவையில் உள்ள Cognizant நிறுவனத்தில் நடைபெற இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Cognizant ஐடி நிறுவனமானது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள மொத்த காலியிடங்களையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவையில் வருகிற ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின்படி Snowflake Developer என்ற பணிக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இன்டர்வியூவில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் ஜனவரி 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வந்து விட வேண்டும் என்றும் அதன் பின் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்வியூ நடைபெறும் முகவரி :-

Cognizant Technologies,
Chill Special Economic Zone, Keeranatham Village, Saravanampatti,
Coimbatore – 641035

குறிப்பு :-

இந்த இன்டர்வியூவின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள எந்த இடத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
. இன்டர்வியூக்கு செல்பவர்கள் ரெஸ்யூம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleTNPSC தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு!! ஜனவரி 22 முதல்!!
Next articlePAN கார்டுகளை குறிவைத்து புதிய மோசடி!! எச்சரிக்கை விடுத்த PIB!!