ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!!

0
307
#image_title

ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!!

கிரிக்கெட் போட்டிகள் என்றாலே ஒரு காலத்தில் வெறுக்கப்பட்டு வந்த நிலையில், பல விதமான விதிமுறைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றி வந்தன, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த பெருமை இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாரும்.

கிரிக்கெட் போட்டிகளில் பெரும் சுவாரஸ்யத்தை கொண்டு வந்ததென்றால் அது ஐபிஎல் தான், வருடம் ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த போட்டிகளை காண உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். ஒவ்வொரு போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

வழக்கம் போல இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் புதிதாக மூன்று விதிமுறைகள் கடைபிடிக்க படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு விளையாடும் வீரர்களின் பட்டியலை எதிர் அணிக்கு இனி டாஸ் போட்ட பின்பு தரலாம், அதே போன்று எதிரணி பேட்ஸ்மேனை விக்கெட் கீப்பர்கள் சீண்டினால் எதிரணிக்கு கூடுதலாக ஐந்து ரன்கள் வழங்கப்படும்.

ஓவர்கள் வீசும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வீசினால் முதல் வட்டத்திற்கு வெளியே மொத்தமாக நான்கு பீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வர உள்ளதால், இனி ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் இந்த புதிய விதிமுறைகள் ஏற்கனவே, தென்னாப்பிரிக்கா நாடு நடத்திய போட்டிகளில் நடைமுறை படுத்தியதில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ஐபிஎல் போட்டிகளில் செயல்படுத்த உள்ளது.

இந்த புதிய விதி முறைகளில் வீரர்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ ரசிகர்கள் பெரும் கொண்டாட்ட மலையில் நனைவது உறுதி.

Previous articleவாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!
Next articleஇந்த ராசிக்காரரே வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை!! இன்றைய ராசிபலன்!!