வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

0
172
#image_title

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் ஜுரம் தற்போது தீவிரமாக தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக பாஜக மோதல், மறுபக்கம் வழக்கம் போல காங்கிரஸ் உட்கட்சி மோதல் என தினந்தோறும் ஒரே களேபரமாக தான் உள்ளது தமிழக அரசியல்.

இந்த நிலையில் தான் பாஜக தமிழகத்தில் பல முக்கிய அரசியல் தலைகளுக்கு வலைவீசி பார்த்ததில் தற்போது அந்த வலையில் தமாகா தலைவர் ஜிகே வாசனை சிக்க வைக்க பாஜக மேலிடம் முயன்று வருகிறது. இதை அறிந்து கொண்ட காங்கிரஸ் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி வாசன் மீண்டும் காங்கிரசுக்கு வந்தால் அவரின் தலைமையில் செயல்பட தயார் என அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜகவோ வாசனை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் அவருக்கு அமைச்சர் பதவி தந்தால் காங்கிரஸ் கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்களும் இழுத்துவிட முடியும் என பாஜக மேலிடம் நம்புவதால் தொடர் தூது சென்று கொண்டுள்ளது. மேலும் அழகிரியின் இந்த அழைப்புக்கு காங்கிரஸ் மேலிடம் அவருக்கு செம டோஸ் விட்டுள்ளார்கள், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த அழகிரி மேலிடம் தான் மீது நடவடிக்கை எடுத்தால், தன்னோட ஆதரவாளர்களை அழைத்துகொண்டு தமாகாவில் சேர திட்டம் போட்டுள்ளார் அழகிரி.

காங்கிரஸ் மேலிடம் தனக்கு டோஸ்விட்டும் அதை கண்டுகொள்ளாத அழகிரி தான் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளார். அழகிரி அழைப்பதை பற்றி வாசன் விசாரித்தபோது விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து காலி செய்ய இருப்பதால், இப்போது துண்டை போட்டு இடம் பிடிக்க முயற்சி செய்வதாக தகவல்களை கேள்விப்பட்ட வாசன் என்ன செய்ய போகிறார் என்ற அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.