உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

0
313
உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!
உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் ஒன்றையும், நுகர்வோர் குறை தீர்ப்புக்காக செயலி ஒன்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இதை அறிமுகம் செய்தார்.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் ச.உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் மற்றும் கூடுதல் ஆணையர் டாக்டர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் வ.கிருஷ்ணகுமார், சென்னை நியமன அதிகாரி டாக்டர் சதீஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது அறிமுகம் செய்யப்படும் இணையதளத்தில் உணவு பாதுகாப்புத்துறை பற்றிய தகவல்கள், உணவு ஆய்வகங்களின் முகவரிகள்,  உணவு ஆய்வகங்களின் கட்டண விவரங்கள், கேடு விளைவிக்கும் உணவு பொருட்களின் தடை உத்தரவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

உணவுவின் தரம் குறித்து நுகர்வோரின் குறைகைளை போக்குவதற்காக “தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி” என்ற பெயரில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுகர்வோர்களின் புகார்களை தெரிவிக்க 2017 ஆம் ஆண்டு, 9444042322 என்ற வாட்ஸ் அப் எண் உருவாக்கப்பட்டது. மேலும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சலை விட தற்போது அறிமுகமாகும்  செயலி இன்னும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த செயலி பொதுமக்கள் எளிதில் கையாளும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.

Previous articleதிராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!! 
Next articleபொள்ளாச்சியிலிருந்து கோவா செல்லலாம்!! இன்று ஒரு நாள் ஆப்பர்!