மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Parthipan K

Updated on:

Introducing a new program for alternative donors! Tamil Nadu government announcement!

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிராமபுறங்கள் மற்றும் நகரப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  வீடு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளி நல இயக்குனர் தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அதில்  40 சதவீதம் அல்லது அதற்கு மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள்  மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்றிருக்க  வேண்டும் எனவும் கூறினார்.

அவர்கள்  அனைவரும் ஆவணகள் வைத்திருந்தால்  எந்த ஒரு நிபந்தனைக்களும்மின்றி மாற்றுத் திறனாளிகளை  கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் ஒப்புதல்களின் அடிப்படையில் வீடுகள் வழங்க அரசு உத்தரவிட்டது.மாற்றுத் திறனாளிகள் தகுயுள்ளவர்கள் இல்லாத அடிப்படையில் மற்ற விண்ணப்பதாரர்களுக்கு வீடு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .