வாட்ஸ் அப்பில் புதிய பாதுகாப்பு கருவி அறிமுகம்!! மெட்டா நிறுவனம் அதிரடி!!
வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி தற்போது இணையத்தில் வேகமாக பரவும் தகவல்கள். மேலும் இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் இனி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ள முடியும். இதன் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ போன்ற விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய அப்டேட்டை பயன்படுத்தி பழைய உரையாடலை மீட்க முடியும்.
தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. முதலில் உங்களின் தனிப்பட்ட சாட்டை லாக் செய்யும் வசதியை சில நாட்கள் முன் அறிமுகப்படுத்தியது. நீங்கள் யாருடைய சாட்டை மறைக்க விரும்பிகிறீர்களோ அந்த நபரின் மெசேஜ் chat lock கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனை தொடர்ந்து ப்ளூ டிக் மறைக்க, hide status, profile, ஆன்லைன் status ஆப், டூ ஸ்டேப் verification மற்றும் தெரியாத நம்பர் அழைப்பு போன்ற புதிய அம்சங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகபடுத்தி உள்ளது. இது போன்ற புதிய வசதிகள வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய பாதுகாப்பு கருவிகள் அடங்கிய நியூ அப்டேட்டை அறிமுகபடுத்தி உள்ளது. மேலும் அந்த அப்டேட்டை பயன்படுத்தி வாட்ஸ் அப் டெவலப்பர்கள் சோதனை செய்து வருவதாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய வாட்ஸ் அப் பாதுகாப்பு கருவி தெரியாத மற்றும் புதிய தொலைபேசி எங்களில் இருந்து அழைப்புகள வருவது தெரியப்படுத்தும்.
மேலும் இந்த கருவி ப்ரோபைல் புகைப்படம், பொன் நம்பர், ரிப்போர்ட் மற்றும் பிளாக் செய்வது போன்ற தகவலை பாதுகாப்பாக வைக்க விளக்கம் அளிக்கும். இந்த பாதுகாப்பு கருவியை பயன்படுத்தி வாட்ஸ் அப்யை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.