மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

0
35

 

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…

 

மகாராஷ்டிரா மாநிலம் தாணே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.

 

மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அதிவிரைவு சாலையில் பணியின் பொழுது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒருநாள் சுற்றுப் பயணமாக ஜனாதிபதி முர்மு அவர்களும் பிரதமர் மோடி அவர்களும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இராட்சத கிரைன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இந்த நிவாரணத் தொகையானது தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 

பிரதமர் மோடி அவர்களின் வருகைக்காக புனே சென்றுள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தாணே பகுதியில் நடந்த விபத்து குறித்து அமைச்சர்களும் அதிகாரிகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் இராட்சத விபத்து குறித்து நிபுணர்கள் மூலம் விரைவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.