புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!!

Photo of author

By CineDesk

புதிதாக டிரோன் காவல் பிரிவு அறிமுகம்!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடக்கம்!!

சென்னை மாவட்ட காவல் துறையில் ரூபாய் 3.60 கோடி செலவில் டிரோன் காவல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அடையாரில் இதற்கான செயல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக ஒன்பது டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா வியாழக்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த புதிய டிரோன் பிரிவு போலீஸ் கமிஷ்னர் சங்கர்ஜிவால் முன்னிலை வகிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களால் துவங்கப்பட்டது.

டி.ஜி.பி. பணியில் இருந்து ஓய்வு பெரும் இவர் இது குறித்து கூறி இருப்பதாவது, தமிழ்நாடு காவல் துறையை மேலும் நவீனப்படுத்த வேண்டும் என்பது நமது முதல்வரின் கனவு திட்டம்.

இது குறித்து தொழில்நுட்ப ரீதியாகவும், திறன் மேம்பாட்டு ரீதியாகவும், காவல் துறையை மேலும் விரிவாக்க நமது முதல்வர் திட்டமிட்டு செயல்படுகிறார்.

முதல்வர் சட்ட சபையில் இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிறகு இந்த டிரோன் போலீஸ் பிரிவு துவங்கப்பட்டது. இந்த டிரோன் பிரிவு மூன்று வகையாக செயல்படும்.

முதல் பிரிவு சென்னையில் உள்ள மெரினா போன்ற இடங்களில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் விதமாக செயல்படுத்தப்படும். மேலும் இது அதிக எடையை சுமக்கும் விதமாக உள்ளது. இந்த வகையான டிரோன்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனையின் போது கண்ணீர் மற்றும் புகைகுண்டுகள் கொண்டு செல்வதற்கு பயன்படும்.

இரண்டாவது பிரிவு குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளிகளை விரைந்து சென்று பிடிப்பதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பிரிவு ஆவடி, தாம்பரம் போன்ற நீண்ட தூரங்களுக்கு செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் உத்தரவின் பேரில் விபத்து தடுப்பு படை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது டி.ஜி.பி. வினித்வான்கடே தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் விபத்து ஏற்படும் பகுதிகளை உடனடியாக கண்டுபிடித்து விபத்து ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விபத்து தடுப்பு படை ஐ.ஐ.டி. நிபுணர்களின் உதவியோடு செய்யப்படுகிறது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறி உள்ளார்.