2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே சரக்கு விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மூன்றாம் அலை எச்சரிக்கை ஏற்கனவே உள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு பணிகளுக்கு கொரோனா 2 டோஸ் தடுப்புசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாமக்கல்லில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தடுப்பூசி செலுத்ததியவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குடிமகன்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அனைத்து மது கடைகளிலும் தடுப்புசி போட்டவர்கள் மட்டுமே மது விற்பனை என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.