ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகை காணாமல் போனதாக விசாரணையில் தகவல்

Photo of author

By Anand

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகை காணாமல் போனதாக விசாரணையில் தகவல்

Anand

Investigation informed that 200 Savaran jewels were missing from Rajinikanth's daughter Aishwarya's house

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் நகை காணாமல் போனதாக விசாரணையில் தகவல்

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் 200 சவரன் நகை காணாமல் போனதாக தேனாம்பேட்டை போலீசார் விளக்கத்தை பெற்றுள்ளனர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து அறுபது சவரன் நகை காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் 100 சவரன் நகைகளை தேனாம்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் புகாரில் 60 சவரன் மட்டுமே குறிப்பிட்ட நிலையில் போலீசார் ஈஸ்வரியிடமிருந்து 100 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இது மட்டும் அல்லாமல் கைது செய்யப்பட்ட ஈஸ்வரியை போலீஸ்காவில் எடுத்து விசாரணை நடத்திய போது மேலும் 43 சவரனை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

புகாரை விட பறிமுதல் செய்த நகையின் அளவானது அதிகமாக இருப்பதால் இதுகுறித்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விளக்கத்தைக் கேட்டு பெற்றுள்ளார். அதன்படி மொத்தமாக 200 சவரன் தங்க நகை காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். இதனை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். 200 சவரன் நகையில் தற்போது வரை 143 சவரன் தங்க நகைகள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள நகை குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருவதாக தேனாம்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.