அதான் 18+ போட்ருக்கே! நீ ஏன் உன் புள்ளையை பார்க்க வைக்கிற! பெற்றோர்களே எச்சரிக்கை!

0
107

இன்றைய காலகட்டத்தில் கல்வி முதல் அனைத்துமே ஆன்லைன் ஆக மாறியுள்ள நிலையில் விளையாடும் ஆன்லைன் கேம் எந்த அளவிற்கு அவர்களை பாதிக்கிறது என்பதை பற்றி பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டைத் தடை செய்திருந்தாலும் விபிஎன் முறையின் மூலம் சட்டவிரோதமாக அதை விளையாடி வருகின்றனர். பப்ஜி இல்லாமல் ஃப்ரீ பையர் என்ற மற்றொரு ஆன்லைன் கேமும் வந்துள்ளது. இந்த பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர்கள் அந்த விளையாட்டு எப்படி விளையாடுவது என முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடி விளக்குவதுதான் மதன் யூடியூப் சேனல்.

ஆனால் இந்த சேனலில் வரும் மதன் கெட்ட வார்த்தைகளால் பேசுவதும் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவதும் அவர்களின் அந்தரங்களை பற்றி பேசுவதும் பப்ஜி விளையாடும் சிறுவர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. இதனால் விரைவாக அவரது சேனலுக்கு அதிகமான வருவாயும் வந்துள்ளது.

ஆன்லைனில் விளையாட வரும் பெண்களை குறி வைத்து அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குச் சென்று அவர்களுடன் வீடியோ சாட் செய்யலாம் என்று அழைக்கும் வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றது.

மேலும் முதலிரவுக்கு செல்லும் ஆண்கள் எப்படி தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்வது, வலுவாக்கி கொள்வது என்று அந்தரங்க மருத்துவர் ஆகவே மாறியுள்ளார் இந்த மதன்.

ஆன்லைன் விளையாட்டில் பல அந்தரங்கமான விஷயங்களை பேசி இளைஞர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் என்று கூறுகின்றனர்.

இவருடன் இணைந்து ஆன்லைனில் விளையாடுவதற்கு ஏகப்பட்ட சிறுவர்கள் பணம் கட்டி சேர்ந்துள்ளார்கள்.

ஆண்களிடம் தகாத வார்த்தையில் பேசும் மதன், பெண்கள் என்றால் அந்தரங்கத்தை பற்றி பேசி மூன்றாவது மனைவியாக இருந்து கொள் என்று அழைப்பு விடுத்து ஆன்லைனில் தன்னை ஒரு பிளே பாய் ஆகவே காட்டிக் கொண்டு உள்ளார்.

இந்த யூடியூப் சேனல் மீது ஆபாசமாக பேசுவது பெண்களை இழிவாக பேசுவது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப் பட்டிருந்த நிலையில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி யூடியூப் இல் வெளியிட்ட மதன் தனக்கு யூ டியூப் மூலம் கிடைக்கும் வருமானம் என்று விளக்கமளித்துள்ளார். தொடர்ச்சியாக 20 மணி நேரம் நேரலை செய்து நான் முன்னேறி இருக்கிறேன் என்று மதன் கூறுகிறார். அதை பிடிக்காத சிலர் பரப்பும் பொய்யான தகவல்கள் இது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மதனுக்கு ஆதரவாக ஒரு சில புள்ளிங்கோ. இது ஆன்லைன் கேம். இப்படித்தான் பேசிக்கொள்வோம். அதுதான் 18+ என்று போட்டு இருக்கு. நீயேன் உன் புள்ளையை பார்க்க வைக்கிற என்று அவனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

அத்துடன் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், இதை ஒரு கட்டுக்கதை என்று நினைத்துவிட வேண்டாம் என்று காவல்துறையினர் முறையான விசாரணையை தொடங்குவோம் என்றும் காவல்துறை சார்பில் இருந்த தெரிவித்துள்ளனர்.

மதன் யூடியூப் சேனல் மீது காவல்துறையினர் விசாரணை தொடங்கி உள்ள நிலையில், மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் புகாரை ஏற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது.