காவல் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள காவல்துறையில் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,547 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
30-09-2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 7,547
பெண் காவலர்: 2,491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
ஆண் காவலர்: 4,453 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
முன்னாள் ராணுவத்தினர்: 603 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 25வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதில் பட்டியலின மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு,இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டு மற்றும் பட்டியலின,பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினருக்கு 8 ஆண்டு வரை வயது வரம்பில் இருந்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30-09-2023 ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் பட்டியல் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: கணினி வழி
வருகின்ற டிசம்பர் மாதம் கணினி வழியில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் எழுத்துத் தேர்வு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த எழுத்து தேர்வு பொது அறிவு (General Awareness),கணித பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Numerical ability),காரணங்கானல் (Logical Reasoning),கணினி அறிவியில் அடிப்படை (English Language) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக இருக்கும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம்,புத்தகங்கள்,துண்டுச்சீட்டு, செல்பேசி,ப்ளூடூத் சாதனங்கள்,ஹெட்போன்கள்,சிறிய அளவிலான கேமராக்கள்,ஸ்கேனர்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் அடையாள அட்டைகளை கட்டாயம் தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.