பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் !!

0
37

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன்

சமீப நாட்களாக நம் இந்திய நாட்டின் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருக்கின்றனர். ஆனால், மும்பையை சேர்த்து சிறுவர் ஒருவன் புதிய தொழில் புத்தியை கையாண்டு பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளான். அந்த சிறுவன் யார்? அவன் செய்த தொழில் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.

திலக் மேத்தா என்ற சிறுவன், 18 வயதுக்கு முன்பே முயற்சியில் இறங்கி தொழில்முனைவோராக உறுவெடுத்தவர். தற்போது 16 வயது நிரம்பிய இவர், 2018 ஆம் ஆண்டு காகிதங்கள் மற்றும் பார்சல்கள் (Papers and Parcels) என்னும் நிறுவனத்தை தொடங்கினார். கூரியர் சர்வீஸ் போன்ற சேவைகளை முழுமையாக டிஜிட்டல் பரிமாணத்தில் அளித்து குறுகிய காலத்திலேயே அதிக வாடிக்கையாளர் களைப் பெற்றார். மும்பையைச் சேர்ந்த இவர் டப்பாவாலாக்களு டன் ஒத்துழைத்து, மும்பையின் சில பகுதிகளில் குறைந்த விலையில் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வதை உறுதி செய்தார். இதில், பேனாக்கள், ஆவணங்கள் உட்பட சிறிய பொருட்க ளைக்கூட வீடு வீடாகச் சென்று பொருளை வாங்கி மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்யும் சேவை இவரது நிறுவனம் செய்து வருகிறது.

குறைந்த கட்டணத்தில் விரைவான சேவை என்பதை டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் செய்வதால் நினைத்த்தை விட குறுகிய காலத்திலேயே இவரது நிறுவனம் பெயரைப்பெற்று விட்டது. பேப்பர்ஸ் என் பார்சல்ஸ் நிறுவனம் அதன் செயல்பாடுகளுக்காக அதன் மொபைல் பயன்பாட்டையும் கொண்டுள்ளது. தற்போது 300க்கும் மேற்பட்ட டப்பா -வாலா பார்ட்னர்களுடன் சுமார் 200 ஊழியர்களைக் கொண்டு இவரது நிறுவனம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு டப்பாவாலாவும் ஒரு கூரியர் பையனாக மாறி பிக்-அப் மற்றும் டெலிவரிக்கான ஆர்டர்களை எடுக்கையில் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனையும் வைத்திருக்கின்றனர். இந்த தொழிலாளர்களின் உதவியுடன் நாள்தோறும் சுமார் 1500 டெலிவரிகளைச் செய்து வருகிறார். பேப்பர்ஸ் என் பார்சல்கள் மத்திய மும்பையில் உள்ள தாதரில் இயங்கி வருகிறது.

திலக் மேத்தா மும்பை மட்டுமல்ல அது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தனது தொழிலை விரிவுப்படுத்தி தனது லாபத்தை பன்மடங்கு பெருக்கி உள்ளார். சிறுவன் திலக் மேத்தா மும்பை நகரத்து இளைஞர்களுக்கு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதிலும் உள்ள இளம் தொழில் முனைவோருக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

author avatar
Parthipan K