2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட வீரரும் 2025 ஆம் ஆண்டு இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடக்கூடிய வீரருமான புவனேஸ்வர் குமார் தன்னுடைய முன்னாள் அணியின் உரிமையாளர் காவியா மாறன் குறித்து சில முக்கிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
புவனேஸ்வர் குமார் காவ்யா மாறன் குறித்து தெரிவித்திருப்பதாவது :-
ஒரு அணி நன்றாக விளையாடவில்லை என்றாலும் அல்லது சில வீரர்கள் தவறுகளை மேற்கொண்டாலும் அந்த அணியினுடைய உரிமையாளர் கோபப்படுவதோ அல்லது மறைமுகமாக கேள்விகள் கேட்பதோ நிகழ்வது சாதாரண விஷயம் என்றும் ஆனால் காவியா மாறனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் ஒவ்வொரு நாளும் நேரில் வந்து விளையாட்டை பார்ப்பதோடு மட்டுமல்லாது அங்கு இருக்கக்கூடிய வீரர்களுக்கு போட்டியில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவார் என பலரும் நினைத்திருக்க கூடிய நிலையில் உண்மையில் அங்கு அதுபோன்று நடக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
அதற்கு மாறாக, நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் எதுவும் சொல்ல மாட்டார் என்றும் எப்பொழுதுமே ஒரு நண்பர் போல எங்களை ஆதரிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நான் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது என்றும் புவனேஸ்வர் குமார் கூறியிருப்பது தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரசிகர்களால் பெரிதளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
போட்டி என்று வந்துவிட்டால் வீரர்களை அவர்களது போக்கில் சென்று ஆறுதல் செய்த விளையாட வைப்பது காவியா மாறனின் பழக்கமாக உள்ளது என்பதை இதன் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை அவர்களை திட்டினாலோ அவர்களிடம் கோபப்பட்டாலோ ஒரு நண்பர்களாக இருக்கக்கூடிய சூழல் என்பது அந்த அணியில் உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.