மார்ச் 22 2025 அன்று துவங்கிய ஐபிஎல் தொடரில் 18 ஆவது சீரிஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான வீரராக தோனி இருக்கிறார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.
தோனி குறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்திருப்பதாவது :-
இது பெரிய அணிகள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் புதிதாக தோன்றிய சில அணிகள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது என தெரிவித்திருக்கிறார். எது எப்படி இருந்தாலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மிகவும் ஆபத்தான வீரராக மகேந்திர சிங் தோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தோனியின் உடைய விக்கெட் கீப்பிங் வேகமானது இன்றளவும் குறையவில்லை என்றும் அதோடு தன்னுடைய பகுதியை மிகவும் சிறப்பாக அவர் விளையாடுகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார். பாட்டிங் என வரும்போது இறுதியாக இறங்கி 10 முதல் 15 பந்துகளில் அதிக அளவு ரன்களை குவித்து தாக்கத்தை ஏற்படுத்துகிற வீரராக அமைத்திருக்கிறார் என்றும் தன்னை பொறுத்தவரையில் இந்த வருடம் மிகவும் ஆபத்தான வீரர் அவர் தான் என்றும் இந்த ஆண்டு ஆட்டத்தை பொறுத்தே அவர் ஓய்வு முடிவுகளையும் அறிவிப்பார் என தெரிவித்திருக்கிறார்.