சாம்பியன்ஸ் டிராபி மூன்றாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றதைக் கோலாகலமாக இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் தருணத்தில் இதனை தொடர்ந்து அதே சந்தோஷத்தோடு மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடியக்கூடிய இந்த ஐபிஎல் மேட்ச் ஆனது தற்பொழுது மார்ச் 22 துவங்க இருக்கும் நிலையில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. நேரடியாக ஸ்டேடியத்திற்கு சென்று மேட்ச் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் தங்களுடைய ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முறையாக பின்பற்றவும்,
✓ ஐபிஎல் இன் அதிகாரப்பூர்வ இணையதளம் / BookMyShow / Paytm insider / ticket Genie போன்றவற்றின் உள் நுழைய வேண்டும்.
✓ அதற்குள் எந்த லீக் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
✓ அதற்குள் ஜென்ரல் , மிட் ரேஞ்ச் , பிரீமியம் மற்றும் விஐபி என டிக்கெட்டுகள் பல பிரிவுகளில் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான டிக்கெட்டை கிளிக் செய்து கொள்ளவும்.
✓ அவ்வாறு தேர்வு செய்த பின்னர் யு பி ஐ அல்லது நெட் பேங்கிங் ஐ பயன்படுத்தி உங்களுடைய டிக்கெட்டுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும்.
✓ உங்களுடைய டிக்கெட் உறுதி செய்த பின் உங்களுடைய மெயில் ஐடி அல்லது எஸ் எம் எஸ் இருக்கு முன்பதிவு விவரங்கள் வந்து சேரும்.
பொதுவாக ஐபிஎல் லீக் போட்டிகளின் உடைய டிக்கெட்டுகளின் விலை ஆனது 900 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும் சில நேரங்களில் போட்டிகளில் பங்கு பெறக்கூடிய அணிகளை பொருத்தும் இடங்களை பொருத்தும் இந்த விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.